இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
779
Today Horoscope 20-07-2018

இன்று!
விளம்பி வருடம், ஆடி மாதம் 4ம் தேதி, துல்ஹாதா 6ம் தேதி,
20.7.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, அஷ்டமி திதி மாலை 6:48 வரை;
அதன் பின் நவமி திதி, சித்திரை நட்சத்திரம் மதியம் 1:54 வரை;
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
பொது : லட்சுமி நரசிம்மர் வழிபாடு.

.

மேஷம்:

சுற்றுப்புற சூழலின் தாக்கம் உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர்.

 

ரிஷபம்:

மனதில் உருவான திட்டம், செயல் வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம்.தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். மனைவி கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.

மிதுனம்:

தனித்திறமையுடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, எதிரியால் இருந்த தொல்லை குறையும். பெண்களுக்கு சகோதர வழியில் உதவி கிடைக்கும்.

கடகம்:

முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். பெண்கள் நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் தரும்.

சிம்மம்:

பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவதால் மட்டுமே, எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் சீராகும். அரசுவகையில் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி:

பூர்வபுண்ணிய நற்பலன் துணை நிற்கும். தொழில், வியாபாரம் வியத்தகு வளர்ச்சி பெறும்.உபரி பணவருமானம் வந்து சேரும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மனைவி கூடுதல் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார்.

துலாம்:

பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிபுரிவதால் மட்டுமே, எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணவரவு குறைந்த அளவில் இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல்நலம் சீராகும். அரசுவகையில் ஆதாயம் கிடைக்கும்.

விருச்சிகம்:

நேர்த்தியுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளப்பரிய வளர்ச்சி ஏற்படும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன் மைத்துனருக்கு உதவுவீர்கள்.சுற்றுலா சென்று வர பயணத்திட்டம் உருவாகும்.

தனுசு:

எவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்:

இஷ்ட தெய்வ வழிபாட்டால் நன்மை காண்பீர்கள். வெகுநாள் மனதில் இருந்த சஞ்சலம் தீரும்.அதிக உழைப்பினால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கும்பம்:

அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்

மீனம்:

நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடு வரலாம்.பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் விலகும். வருமானம் மிதமாக இருக்கும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும்..

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்