பிரதமரின் சிரிப்பில் உண்மையில்லை..! : பதற்றமே இருக்கிறது..! – ராகுல் காந்தி..!

0
635
prime minister's laughter really tense - rahul gandhi

ரபேல் விவகாரத்தை பற்றி நான் பேசும்போது, பிரதமர் சிரிக்கிறார். ஆனால் அந்த சிரிப்பில் ஒரு பதட்டம் இருக்கிறது. அவரால் என் கண்களை பார்க்க முடியவில்லை.prime minister’s laughter really tense – rahul gandhi

அதை நான் புரிந்து கொள்கிறேன். ஏனென்றால் அவர் உண்மையை சொல்லவில்லை என்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை மக்களவையில் கடுமையாக சாடினார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று காலை மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்காமல் கூட்டணி கட்சியான சிவசேனா மற்றும் பிஜூ ஜனதா தன எம்பிகள் புறக்கணித்தனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் :

நாட்டு மக்களின் ” வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவதாக நம்பிக்கையளித்து பிரதமர் மக்களை ஏமாற்றி வருகிறார்.

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசு அளித்த பொய் வாக்குறுதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், நான் பிரதமர் இல்லை. பிரதம சேவகன் என்றார் மோடி. ஆனால் பிரதமர் யாருக்கு சேவகராக இருக்கிறார்.. அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மோடி மெளனம் காப்பது ஏன்?

பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

எங்கே போனது 2 கோடி வேலை வாய்ப்புகள். மோடி இளைஞர்களையும் நம்பிக்கையளித்து ஏமாற்றி வருகிறார்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பர் பலனடைந்துள்ளார். என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேசவேண்டும்; ஆனால் அதை தவிர்க்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும் என்றார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு இடையே பாஜகவினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி தனது பேச்சை முடிக்கும் முன் பிரதமர்மோடி மீது எனக்கு வெறுப்பு இல்லை. என் மனதில் அவருக்கு இடமுண்டு என்று பேசினார்.

அப்போது அனைவரும் சிரித்தனர். அதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் இருக்கை அருகே சென்ற ராகுல் அவரை கட்டி தழுவி அப்படியே திரும்பினார். பின்னர் மோடி ராகுலை அழைத்து கைகொடுத்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :