திரையரங்குகளில் கட்டாயம் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்..!

0
371
national anthem theatres

திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட முன்னர் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்குமாறு பல தரப்புக்களில் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.(national anthem theatres)

திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமை நீதிமன்றத்தின் ஊடாக திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த பின்னர் அதனை கட்டாயமாக்க நடவடிக்கை எடுப்பதாக திரைப்பட கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எம்.என்.ஆர். அபேவர்தன கூறியுள்ளார்.

பாரம்பரிய ரீதியாக சில திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுடன், சில திரையரங்குகளில் அது இடம்பெறுவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

விநியோக உரிமை கிடைத்ததன் பின்னர் திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட முன்னர் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்குவதாக திரைப்பட கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எம்.என்.ஆர். அபேவர்தன கூறியுள்ளார்.

 

Tags:national anthem theatres,national anthem theatres,national anthem theatres,