மத்தல விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்கும் போது நாம் தேசிய பாதுகாப்பு மற்றும் ஊழியர் உரிமைகளிலும் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த கொடுக்கல் வாங்கலின் போது எம்மிடம் பல நிபந்ததனைகளும் உள்ளன என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்துள்ளார். Mattala Airport No Military Purpose Minister Nimal Confirmed
பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுர குமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..
நிமல் சிறிபால டி சில்வா மத்தல விமான நிலைய குத்தகை பற்றி மேலும் தெரிவிக்கையில்,
மத்தலவிமான நிலையத்தை பொறுப்பேற்கும்போது போது நட்டத்தில் இருந்தது. இதனை பொருளாதார ரீதியாக இலாபம் அடையும் நிலையமாக மாற்ற திட்டமிட்டேன். அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு அல்லது உள்நாட்டு நிறுவனங்களுக்கு யோசனை முன்வைக்க கோரினோம்.
குறித்த விடயத்தில் இந்தியா அரசாங்கம் ஆர்வம் செலுத்தியது. கூட்டு பங்காண்மையின் கீழ் விமான நிலையத்தை கட்டியெழுப்ப இந்திய விமான அதிகார சபை முன்வந்தது. ஆகையால் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கி கடன் சுமையை குறைக்க திட்டமிட்டுள்ளோம்.
இலாபத்தில் 70 வீதத்தை இந்தியா கட்டாயம் வழங்கியே ஆக வேண்டும்.
அதில் தயவு காட்டமாட்டோம். மேலும் இது வணிக கொடுக்கல் வாங்கல் மாத்திரமேயாகும். எக்காரணம் கொண்டு யுத்த விமானங்கள் தரிப்பதற்கு நாம் இடமளிக்க போவதில்லை. பாதுகாப்பில் எமது விமான படையினரே இருக்க வேண்டும். வெளியில் எவருக்கும் அதிகாரமில்லை. அனர்த்த நடவடிக்கைகளின் போது எமது குழுவினரே தலையீடுவர் என உறுதியாக கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசியல்வாதியின் மோட்டார் வாகனம் விபத்து ; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
- 130 க்கும் அதிகமான தமிழர்களை கொன்றுகுவித்த உடும்பன்குள படுகொலை நினைவு தினம்
- மஸ்கெலியா வைத்தியசாலையில் தொடரும் அவலம்; நோயாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மரணதண்டனையால் ஜீஎஸ்பி சலுகை இடைநிறுத்தப்படும் அபாயம்
- சம்பளம் வேண்டாம்; அலுகோசு பதவிக்கு ஒரு கிராம இளைஞர்கள் தயார்
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் மோதல்; வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
- மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com