பிரான்ஸில், காவல்நிலையத்துக்கு பணிக்கு சென்றுகொண்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி இரு இளைஞர்களால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். France 16 year old youth fiercely attacked police
நேற்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் பிரெஞ்சுத் தீவான Corsica இல் உள்ள de Bastia காவல்நிலையத்துக்கு குறித்த அதிகாரி பணிக்குச் சென்றார்.
அப்போது எதிராக வந்த இரு இளைஞர்கள் குறித்த அதிகாரியை மிக மோசமாக தாக்கியுள்ளனர். தாக்குதலின் போது அதிகாரி சாரண உடையில் இருந்ததாக அறியமுடிகிறது.
அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவரும் 16 வயதுடையவர்கள் எனவும், குறித்த இளைஞர்கள் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரியின் தலையில் பலமாக அடிபட்டுள்ளதாக அறியமுடிகிறது. அத்துடன் தாக்குதலுக்கு இலக்கான குறித்த அதிகாரி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இத்தகவலை Préfète de Corse தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். குறித்த அதிகாரிக்கு உயிராபத்து எதுவும் இல்லை எனவும், தாக்குதலுக்குரிய காரணம் குறித்து எதுவும் அறியமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tags :- France 16 year old youth fiercely attacked police
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பரிஸ் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் கவலைக்கிடம்!
- Toronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை!
- ரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.