வெட்க சுபாவம் உடைய நடிகர் விமல், காதல் காட்சிகளில் அதிக நெருக்கம் காட்டமாட்டார். அது அவருக்கு ஒரு மைனஸாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது வெட்கத்தை ஓரம் கட்டி வைத்து விட்டார்.Actor Vimal act Ivanuku Engeyo Macham Irukku movie
அதாவது விமல் ஹீரோவாக நடிக்கும் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” படத்தில் இவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். அவருடன் காதல் காட்சிகளில் புகுந்து விளையாட வேண்டும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் கூற அவரும் ஓ.கே சொல்லிவிட்டாராம்.
ஆஷ்னா சவேரியும் தூக்கலான கவர்ச்சி காட்சியில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறாராம். அதன் வெளிப்பாடு காதல் டூயட் காட்சியில் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கும்படி கேட்டபோது விமல், ஆஷ்னா போதும் போதும் என்கிற அளவுக்கு நெருக்கமாக போஸ் அளித்தார்களாம்.
மேலும், படம்பற்றி இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் கூறும்போது.. :-
”கிளாமர் மற்றும் காமெடி கலந்த கதையாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு 10 நாட்கள் லண்டனில் நடந்தது. 2 ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. கவலையை மறந்து சிரிக்க வைக்கும் ஜாலியான ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும். சர்மிளா மாண்ரே, ஆர்.சாவண்ட் தயாரிக்கின்றனர். கோபி ஒளிப்பதிவு. நட்ராஜ்சங்கரன் இசை” என கூறினார்.
<MOST RELATED CINEMA NEWS>>
* தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!
* ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!
* ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!
* தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!
* வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!
* பிக்பாஸ் வீட்டில் நுழைந்த அனாதை குழந்தைகள் : கண்ணீர் விட்டழுத பாலாஜி..!
* கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!
* யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!