பாரத லக்ஸ்மனின் பாதுகாவலரே முதலில் சுட்டார், பாதிக்கப்பட்டவர் துமிந்த சில்வாவே – பிரதி மன்றாடியார்

0
420
dhumintha silva death penalty case baratha luxman side first gun fire

(first shot head former parliamentarian Duminda Silva gunman Gamini)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் தலையிலேயே முதலில் துப்பாக்கிச் சூடுபட்டதாகவும் பாரத லக்ஸ்மனின் பாதுகாவலர் காமினி என்பவரே முதலில் துப்பாக்கிப் பிரயோகத்தை ஆரம்பித்ததாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் சட்டத்தரணி துசித் முதலிகே உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வா சார்பில் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் மேன்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டது.

இதன்போது, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் துசித் முதலிகே வழக்கின் தீர்ப்பை விரிவாக ஆராய்ந்து கருத்து வெளியிட்டார்.

துப்பாக்கிச் சூட்டை பாரத லக்ஷ்மனின் பாதுகாப்பு அதிகாரி காமினி என்பவர் முதலில் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அந்த முதலாவது துப்பாக்கிச் சூடு காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் தலைப் பகுதியில் தோட்டா பாய்ந்து அவர் கீழே விழுந்ததாக பிரதி மன்றாடியார் நாயகம் சட்டத்தரணி துசித் முதலிகே உயர்நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

இதற்கு முன்னதான, மேல் நீதிமன்ற விசாரணை சாட்சிகள் பல, துமிந்த சில்லாவின் தலையில் துப்பாக்கிச் சூடு பட்டது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மேன்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது ஜனாதிபதி சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

துமிந்த சில்வாவின் தலையின் பின்புறமாக துப்பாக்கி தோட்டா பாய்ந்துள்ளது என்பது நீதிமன்ற மருத்துவ அறிக்கையின் மூலம் உறுதியாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் தெரிவிக்கும் போது, சாட்சி அல்லது காரணங்கள் இன்றி துமிந்த சில்வாவின் அரசியல் பிரபலத்தன்மையை மாத்திரம் கருதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கின் தீர்ப்பை லட்சம் தடவைகள் வாசித்தாலும் துமிந்த சில்வாவை குற்றவாளியாக்கியது எவ்வாறு என்பதை கண்டறிய முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, துமிந்த சில்வாவை தவறிழைத்தவராக அளிக்கப்பட்ட தீர்ப்பானது, சரியான தீர்ப்பு அல்ல என்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஐந்து பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் தெரிவித்திருந்தனர்.

வழக்கு விசாரணையில் முன்னிலையான சாட்சி, சாதாரண சந்தேகம் இன்றி உறுதியாவதை ஆராயாமல் அரச சட்டத்தரணிகளின் கருத்துக்கு அமைய மாத்திரம் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

போலியாக சோடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் சாட்சிகளைக் கருத்திற்கொண்டு துமிந்த சில்வாவின் தரப்பு சார்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் வாய்மூல சாட்சிகளை கருத்தில் கொள்ளாமல் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றப்பத்திரிகை இல்லாத விடயங்களுக்காக துமிந்த சில்வா குற்றவாளியாக்கப்பட்டுள்ளதுடன், அது ஒருபோதும் சட்டப்பூர்வமானது அல்ல என்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றவாளியாக்குவதற்காக சோடிக்கப்பட்ட பொய் சாட்சியங்களின் முரண்பாடுகளையும் மாறுபட்டவைகளையும் மேல் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ள போதும், வழக்கு தீர்ப்பின் போது அவை கருத்திற் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

போலி சம்பவங்களை தோற்றுவித்ததன் மூலம் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களம் துமிந்த சில்வாவிற்கு பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பயன்படுத்தியதாக துமிந்த சில்வாவிற்கு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதும், அதற்கான எந்தவித சாட்சியங்களும் வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்படவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(first shot head former parliamentarian Duminda Silva gunman Gamini)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites