ஆவா குழுவால் அச்சுறுத்தல் இல்லை! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் கண்டுபிடிப்பு!

0
496

யாழ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே சிலர் ஆவா குழு பற்றிய தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். Ava Threaten Not Much Jaffna Area Minister Ruwan Vijyawarthana Said

வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர் ஆவா குழு பற்றி அளவுகடந்த அச்சுறுத்தல் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இதை காரணம் காட்டி இராணுவ முகாம்கள் அகற்றப்படாது எனவும் தொடர்ந்தும் படைகள் வடக்கில் நிலை கொண்டிருக்கும் எனவும் ருவான் விஜேவர்த்தன தனது கருத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

தியகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பேதே ருவான் வடக்கு வன்முறை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites