பிரான்ஸில் பாலியல் நோய்கள் அதிகரிப்பு- இளைஞர்களே அவதானம்!

0
307
France growing number sexually transmitted diseases

2012 மற்றும் 2016 க்கு இடையில் நாட்டில் chlamydia மற்றும் gonorrhoea போன்ற நோய்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதால், பொது மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், அடிக்கடி சோதித்து கொள்ளுமாறும் பிரஞ்சு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். France growing number sexually transmitted diseases

பிரஞ்சு பொதுமக்கள் மத்தியில் பாலியல் நோய்த்தாக்கங்கள் (STIs) அதிகரித்து வருகிறது.

பிரதான நோய் கிருமிகளான chlamydia மற்றும் gonorrhoea போன்றவை 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முதல் இருந்ததை விட மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டில், chlamydia கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 267,097 என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 100,000 மக்களுக்கு 491 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

2012 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 76,918 ஆக இருந்தது, இது 2016 ஆம் ஆண்டின் எண்ணிக்கையின், மூன்றில் ஒரு பங்கிற்கு குறைவாக உள்ளது.

Gonorrhea நோய்த்தாக்கல் மூலம், 2012 ல் 15,067 பேரும், 2016 ல் 49,628 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது, அதாவது 15 வயது மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 100 000 பேரில் 91 நபர்கள் தொற்றுநோயாளாராக இருந்தனர்.

“இந்த கணக்கெடுப்பானது ஆணுறைகளைப் பயன்படுத்துவது மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவிற்கு பிறகு வழக்கமான ஸ்கிரீனிங் செய்வதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது” என்று சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

tags :- France growing number sexually transmitted diseases

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்