கைத்துப்பாக்கி பெற்றதாக கூறும் ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி ஆவேசம்

0
469
Minister Ananthi Sasitharan angry case against Ayup Azmin

(Minister Ananthi Sasitharan angry case against Ayup Azmin)

வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையில் உள்ள பெண் அமைச்சர் அரசையும், இராணுவத்தையும் விமர்சித்து விட்டு அவர்களிடமே கைத்துப்பாக்கி ஒன்றை பெற்றதாக மாகாணசபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் கடந்த மாகாணசபை அமர்வில் குற்றம்சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில், அனந்தி சசிதரன் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் அதற்கு பதிலளிக்கும் முகமாக வழக்கு தொடரப் போவதாக குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

வடக்கிலுள்ள ஒவ்வொரு பெண்களும் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறும், அதனை பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுத் தருமாறும் கோரும் அளவிற்குத்தான் பெண்களின் பாதுகாப்பு தன்மை உள்ளது.

குறிப்பாக வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் போன்றவர்கள் வடக்கில் வசிக்கின்ற தருணத்தில் பெண்களிடம் துப்பாக்கி இருக்க வேண்டும் என்ற நிலையும் தற்போது தோன்றியுள்ளது.

எனினும், நான் ஆயுதத்தை பற்றி அறியாதவள் இல்லை.

துப்பாக்கி என்னிடம் இருக்கின்றது என்று உறுதியாக தெரிந்தால் அதை நிரூபிக்க வேண்டும். என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை.

என்னுடைய கைகளும், வார்த்தைகளும்தான் என்னுடைய ஆயுதமாக உள்ளன.

விசேடமாக அனுமதி பெற்று ஆயுதம் இருக்குமாக இருந்தால் வெளிப்படையாக சொல்வதில் பயமில்லை.

நான், முதலமைச்சர், சிவாஜிலிங்கம், சித்தார்த்தன், கஜதீபன் போன்றவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைத்தன.

அந்த போனஸ் ஆசனத்தில் மாகாண சபை உறுப்பினராக வந்த அஸ்மின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்திற்காக எங்களைப் ஆதாரம் இல்லாத அவதூறுகளையும், வதந்திகளையும் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றார்.

இது கண்டிக்கத்தக்க விடயம். என்னிடத்தில் துப்பாக்கி உள்ளது என்று கூறிய அஸ்மின் என்னிடத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்து காண்பிக்க வேண்டும்.

ஆவணங்கள் இருந்தால் அவர் அதனை வெளிப்படுத்தலாம். என்னுடைய சிறப்புரிமையை அஸ்மின் மீறியது மட்டுமல்லாமல், என்னை ஆயுததாரியாக சித்தரித்திருப்பது தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவுள்ளேன்.

நாளை என்னுடைய சட்டத்தரணிகள் கொழும்பில் இருந்து வருகை தரவுள்ளனர். அவர்களுடன் சட்ட ஆலோசனை பெற்ற பின்னர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று அனந்த சசிதரன் தெரிவித்துள்ளார்.

(Minister Ananthi Sasitharan angry case against Ayup Azmin)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites