கட்டாருக்கு தொழில் தேடிச் சென்ற பெண்ணை காணவில்லை?

0
438

(tamil news qatar muslim maid kinniya missing fifteen years)

வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடி கட்டாருக்கு சென்ற பெண் ஒருவரை காணவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

கிண்ணியாவைச் சேர்ந்த ஏ.எம்.ரஷினா என்ற பெண்ணே கடந்த 2003 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதி கட்டார் நோக்கி தொழில் வாய்ப்பு தேடிச் சென்றுள்ளார்.

அவர் அங்கு சென்ற நாள் முதல் இன்று வரையிலும் எந்தவித தொடர்புகளும் கிடைக்கவில்லை என அவரின் உறவினர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் கட்டாருக்கு சென்று 15 வருடங்கள் நிறைவு பெறுவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள  நிலையில் அவர் தொடர்பில் தகவல் அறிந்தால் 0112 864136 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பெண் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

 (tamil news qatar muslim maid kinniya missing fifteen years)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites