அரசியல்வாதியின் மோட்டார் வாகனம் விபத்து ; மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

0
563
Politician's motor vehicle accident

பண்டாரகமை, களுத்துறை நெடுஞ்சாலையில் சுற்றுலா குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் தென் மாகாணத்தின் பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு சொந்தமான சொகுசு மோட்டார் வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் ஆய்வக உதவியாளர் ஒருவர் படுகாயமுற்று பாணந்துறை பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (Politician’s motor vehicle accident)

பண்டாரகமையில் இருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த இந்த மோட்டார் வாகனம் எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, மோட்டார் வாகனத்தில் பயணித்த மூன்று நபர்களும் வாகனத்தின் ஓட்டுநரும் தப்பி ஓட முயற்சித்துள்ளனர்.

எனினும் பொது மக்கள் இவர்களை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Politician’s motor vehicle accident