கமல் ஜோடியாக நடித்த பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி மரணம்..!

0
548
Veteran Actress Rita Bhaduri passes away

பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.Veteran Actress Rita Bhaduri passes away

குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்த ரிதா பாதுரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு பிரச்சினையும் இருந்தது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் உடல் நிலை மோசமானது.  இந்நிலையில்,நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.

மேலும்,1974–ல் கமல்ஹாசன் மலையாளத்தில் கதாநாயகனாக அறிமுகமான படம் கன்னியாகுமரி படத்தில் இவர் ஜோடியாக நடித்திருந்தார். அத்துடன் 1970-களில் வெளியான ”ராஜா”, ”ஜூலி”, ”தில்வில் பியார்”, ”வியார்” உள்பட 70 படங்களில் நடித்து இருக்கிறார். சில படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

அதன்பின் அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் துணை நடிகையாக வந்தார். ”ஹபி ஹான் ஹபி நா”, ”கியா ஹேக்னா”, ”தில் வில் பியார் வியா” ஆகியவை இவர் நடிப்பில் வந்த முக்கிய படங்கள். குஜராத்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இந்தி தொடர்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், மரணம் அடைந்த ரிதா பாதுரி உடல் மும்பை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்தி நடிகர்-நடிகைகள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

சின்னத்திரை நடிகர்-நடிகைகளும் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை இறுதி சடங்கு நடந்தது.

<MOST RELATED CINEMA NEWS>>

தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!

ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

நயன்தாராவை குறிவைத்த காஜல் அகர்வால்..!

நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!

என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..!

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு விடுத்த இரு முக்கிய அறிவிப்புக்கள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Veteran Actress Rita Bhaduri passes away