யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதவர்கள் வீட்டிற்கு சேதம் ஏற்படுத்தியதுடன், வீட்டு உரிமையாளருக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். (Attack young people Achchuveli Jaffna)
அச்சுவேலி பத்தமேனியிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு 10.30 இற்கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டிற்குள் உள்நுழைந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய பொருட்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் கம்பிகள், பொல்லுகள் சகிதம் முகத்தை மறைத்தவாறு குறித்த வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினர் வீட்டின் வெளிக்கதவை அடித்து உடைத்து வெட்டிச் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த குழுவினர் வீட்டின் கதவு ஐன்னல்கள் மற்றும் கதிரை மேசை, குளிர்சாதனப்பெட்டி என அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
எனினும் இந்த குழுவினர் தாக்குதலை மேற்கொள்ள வந்துள்ளதை அறிந்து கொண்ட வீட்டில் இருந்தவர்கள் அவர்களிடம் பிடிபடாதவாறு பாதுகாப்பாக தப்பித்துக் கொண்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் தொடரும் இவ்வாறான சம்பவங்கள் பொது மக்கள மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி
- விகாரையின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையினால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை அதிரடியாகக் கைது
- ஜனாதிபதி ஜோர்ஜியாவிற்கு விஜயம்
- மனைவியை சித்திரவதைப்படுத்திய கணவனுக்கு கிடைத்த தண்டனை
- ஹஜ் யாத்திரிகளிடம் பண மோசடி; நீதிமன்றில் வழக்கு தொடர தீர்மானம்
- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறுநீர் சோதனை செய்ய வேண்டும்
- அபிவிருத்தி உத்தியோகத்தர் கொலை; பெண் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Attack young people Achchuveli Jaffna