என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..!

0
488
Sridevi daughter Janhvi Kapoor exclusive Interview

”என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது.” என ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.Sridevi daughter Janhvi Kapoor exclusive Interview

நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வி டாக்டராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், ஜான்விக்கோ தாய் வழியில் நடிகையாக வேண்டும் என்று ஆசை. ஜான்வி நடித்துள்ள முதல் படமான ”தடக்” ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் படம், அம்மா பற்றி ஜான்வி கூறியதாவது.. :-

”நீ நடிக்க வந்தால் உன்னை என்னுடன் ஒப்பிடுவார்களே என்று கூறி அம்மா கவலைப்பட்டார். நீ கடினமாக உழைக்கிறாய் அது புரியாமல் உன்னை எதற்கெடுத்தாலும் என்னுடன் ஒப்பிடுவார்கள் என்று அம்மா அடிக்கடி கூறினார்.

உன் முதல் படத்தை என்னுடைய 400 ஆவது படத்துடன் ஒப்பிடுவார்கள் என்று அம்மா கூறினார். அவரின் கவலை தற்போது தான் எனக்கு புரிகிறது. என்னை அம்மாவுடன் ஒப்பிடுகிறார்கள்.

நான் நடிகையாக விரும்புகிறேன் என்று வீட்டில் கூறியபோது அம்மா அய்யோ, அய்யோ, அய்யோ என்று கூறி பயந்தார். ஆனால் அப்பா கூலாக எடுத்துக் கொண்டு என்னை உற்சாகப்படுத்தினார். பின்னர் என் விருப்பப்படியே விட்டுவிட்டார் அம்மா.

நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. ‘தடக்’ பட வாய்ப்பு கிடைக்க நான் என்ன நல்லது செய்தேன் என்று தெரியவில்லை. நான் கடினமாக உழைக்க விரும்புகிறேன். நான் எனக்கென ஒரு இடத்தை பிடிக்க விரும்புகிறேன்.

என் முதல் படத்தை பார்க்க அம்மா இல்லை. அவர் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடம் அப்படியே தான் இருக்கும். சிறப்பாக நடித்து அம்மாவை பெருமை அடைய செய்வேன்” என்கிறார் ஜான்வி.

<MOST RELATED CINEMA NEWS>>

ஹீரோவுக்கு இணையான ஆக்‌ஷன் காட்சிகள் : மார்ஷல் கலை கற்கும் எமி ஜாக்சன்..!

வயதை குறைத்துக் கூறிய கத்ரீனா கைப்பிற்கு வந்த சோதனை..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்த சினேகன் : போட்டியாளர்களுக்கு பிரம்பு வைத்து அறிவுரை..!

நயன்தாராவை குறிவைத்த காஜல் அகர்வால்..!

நிர்வாண காட்சிகளில் நடிக்கவும் எனது கணவர் ஆதரவு தெரிவிப்பார் : நடிகையின் பகீர் பேட்டி..!

தல கணக்கு மிஸ் ஆகாது : விஸ்வாசம் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு விடுத்த இரு முக்கிய அறிவிப்புக்கள்..!

யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!

Tags :-Sridevi daughter Janhvi Kapoor exclusive Interview