நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் குடும்பத்திற்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

0
542
tamil news judge ilancheliyans friends help body guard family

(tamil news judge ilancheliyans friends help body guard family)

யாழ்ப்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியான மெய்ப் பாதுகாவலரின் குடும்பத்தினர் வசிக்கும் வீடு வசதியான முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 லட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட அந்த வீடு மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் குடும்பத்தினரிடம் கடந்த வாரம் கையளிக்கப்பட்டது.

குறித்த வீட்டை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் நண்பர்கள், கனடா, லண்டன், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் யாழ்ப்பாண பரியோவான் கல்லூரியில் 1981 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பழைய மாணவர்கள் மற்றும் சிரேஸ்ட கனிஸ்ட மாணவர்கள், வெளிநாடுகளில் வாழும் பரியோவான் கல்லூரி மாணவர்கள் அத்துடன் கனடாவிலுள்ள வேலணை வாழ் மக்கள், நீதிபதி இளஞ்செழியனின் குடும்பத்தினர் இதில் உள்ளடங்குகின்றனர்.

இந்தநிலையில், நீதிபதி இளஞ்செழியனை காப்பாற்றி தன்னுயிரை இழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தை மறவாது அவர்களது வீட்டை புனரமைத்து வழங்கியமை நெகிழ்ச்சியாகவுள்ளது.

கடந்த வருடம் ஜுலை 22 ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சரத் ஹேமச்சந்திர என்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.

17 வருடங்களாக நீதிபதி இளஞ்செழியனுக்கு மெய்ப்பாதுகாவலராக இருந்த சிலாபத்தை சேர்ந்த 51 வயதாகிய சரத் ஹேமச்சந்திர என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து உயிரிழந்தவரின் உறவினர்களை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைத்து சந்தித்த நீதிபதி இளஞ்செழியன் அவர்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரியதுடன், கண்ணீர்விட்டு அழுதார்.

இந்த சம்பவமானது வடக்கு, கிழக்கு மக்களை மாத்திரமல்லாது தென்னிலங்கை உள்ளிட்ட முழு நாட்டையுமே கண்ணீரில் கரைய வைத்திருந்தது.

சரத் ஹேமச்சந்திரவின் குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகின்றது.

தந்தையை இழந்த இரு பிள்ளைகளையும் தனது சொந்த பிள்ளைகளைப் போல் பராமரித்து, தான் இறக்கும் வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகல விடயங்களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்வதாக நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்தார்.

இவர் இனம், மதம், மொழி, பேதம் பாராது செய்த இந்த கைமாறு இலங்கை மக்கள் அனைவரது மனதிலும் ஆழப்பதிந்தது.

(tamil news judge ilancheliyans friends help body guard family)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites