குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை அதிரடியாகக் கைது

0
1012
Drinking alcohol charge child father arrested

வயது வந்தவர்கள் கலந்துகொண்ட நிகழ்சியொன்றில் குழந்தை ஒன்றுக்கு பியர் (மதுபானம்) பருகப்படும் வீடியோ காட்சிகள் இணையத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. (Drinking alcohol charge child father arrested)

இந்த நிலையில், குறித்த குழந்தையின் தகப்பனை பொலிஸார் அடையாளம் கண்டு அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் அநுராதபுரம், மீகலேவ பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் இந்த சமபவம் 14 ஆம் திகதி நடைபெற்றதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு மதுபானம் பருக்கப்பட்ட குழந்தை ஒரு வருடமும் ஒரு மாதமும் உடையது என்றும் இந்தக் குழந்தை அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியிடம் மேலதிக சோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்கு பின்னர் சந்தேக நபருக்கு எதிராக நடவடிக்கை உள்ளதாக மீகலேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Drinking alcohol charge child father arrested