வவுனியாவில் மாணவி சடலமாக மீட்பு; தற்கொலையா கொலையா? பொலிஸார் விசாரணை

0
855
Rescucted student body Vavuniya

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை வீடு ஒன்றில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (Rescucted student body Vavuniya Murder suicide? police investigation)

உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வந்த யோ. மிதுன்ஜா என்ற 17 வயதுடைய மாணவி உயர்தரத்தில் கல்வி பயின்றுள்ளார்.

குறித்த மாணவி கடந்த புதன்கிழமை கல்வி பயின்ற பாடசாலையில் இடம்பெற்ற உயர்தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.

அன்றில் இருந்து வீட்டில் மாணவியின் செயற்பாடுகளில் சற்று மாற்றம் ஏற்பட்டிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு படுக்கைக்குச் சென்ற மாணவியை இன்று அதிகாலை 4 மணியளவில் எழுப்புவதற்காக தாயார் சென்ற போது, மகள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவியின் இறப்புக்கான காரணம் தொடர்பில் கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Rescucted student body Vavuniya Murder suicide? police investigation