அடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல்

0
856
mahinda rajapaksa anura kumara dissanayake china

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிடமிருந்து பெற்ற நிதிகள் குறித்த அனைத்து விபரங்களையும் பகிரங்கப்படுத்த போவதாக ஜேவிபி தலைவர் அனுராகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். (mahinda rajapaksa anura kumara dissanayake china  )

சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட பணத்தொகைக்கான காசோலை மற்றும் காசோலை தொடர்பான இலக்கங்கள் எந்த வங்கியில் காசோலை மாற்றப்பட்டது, யார் யார் சென்று காசோலையை மாற்றினார்கள் என்பது தொடர்பான தகவல்களையே பகிரங்கப்படுத்த போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பில் அடுத்த வாரம்; பாராளுமன்றில் இடம்பெற உள்ள விவாதத்திலேயே இந்த தகவல்களை வெளிப்படுத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

சீனாவிடமிருந்து மஹிந்த ராஜபக்ஷ பெற்ற நிதியுதவி குறித்த அனைத்து விபரங்களையும் அடுத்த வாரத்திற்குள் அம்பலப்படுத்துவோம்.

எழுத்து வடிவ ஆவணமாக இந்த விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்போகின்றோம்.

இலங்கையில் மீண்டும் சர்வாதிகாரத்திற்கு இடமில்லை. பல உலகநாடுகள் சர்வாதிகாரத்தினால் அழிந்துள்ளன.
பிரிவினைவாதமே இலங்கையில் மிகவும் பிரபலமான அரசியலாக மாறியுள்ளது.

ஐக்கியமற்ற பல மோதல்கள் இடம்பெறும்,பகைமையுணர்வும் சந்தேகமும் நிலவும் நாடாக இலங்கை மாறக்கூடாது. சர்வாதிகாரத்தினால் உருவாக்கப்பட்ட தேசம் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:mahinda rajapaksa anura kumara dissanayake china  ,mahinda rajapaksa anura kumara dissanayake china  ,mahinda rajapaksa anura kumara dissanayake china  ,