பலம்வாய்ந்த பாதாள உலக கோஷ்டியை உருவாக்கத் திட்டம்

0
653
development plan strongest underworld

டுபாயில் தலைமறைவாக வசிக்கும் பாதாள உலக கோஷ்டியின் தலைவனான மதுஷ் லக்ஷித அல்லது மாகந்துரே மதுஷ், இலங்கையில் உள்ள அனைத்து பாதாள உலக கோஷ்டி தலைவர்கள், உறுப்பினர்களை ஒன்றிணைந்து பலம்வாய்ந்த குழுவொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பாதாள உலக கோஷ்டியைக் கட்டுப்படுத்தும் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. (development plan strongest underworld)

பாதாள உலகின் கோட் பாதர் (God Father) என அழைக்கப்படும் மாகந்துரே மதுஷ், தனது திட்டத்திற்கு எதிராக உள்ள பாதாள கோஷ்டியினரை அழித்துவிடும் திட்டத்தினையும் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாதாள உலக தலைவர்களில் ஒருவரான பூகொடை மஞ்சுளவின் மனைவியை வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் கொலை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளதும் மாகந்துரே மதுஷ் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக விளக்கமறியலில் உள்ள மற்றும் மாகந்துரே மதுஷ்க்கு எதிரான கோஷ்டியின் உற்சாகமான உறுப்பினர் ஒருவரான பூகொடை மஞ்சுள என்பவரை மாகந்துரே மதுஷின் குழுவில் இணையுமாறு மாகந்துரே மதுஷின் சீடரான கடுவெல போல வசந்த கூறியுள்ளார்.

இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளாததனால் பூகொடை மஞ்சுளவை நோகடிப்பதற்கு அவரின் மனைவியை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தக் கொலை முயற்சி கடந்த 13 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட ஐந்து மாகந்துரே மதுஷின் சகாக்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும் இவர்களிடம் இருந்து கைகுண்டு ஒன்றும், கத்தி ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், போலியான இலக்கத்தகடு பொருத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், பல கையடக்க தொலைபேசிகளும் மற்றும் 02 கிராம் 610 மில்லிகிராம் ஹெரொயினும் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தடுப்பு ஆணையின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; development plan strongest underworld