சன்னி லியோனின் பெயருக்கு சீக்கியர் அமைப்பினரால் ஏற்பட்ட சிக்கல்..!

0
619
Sikh Organization protest Sunny Leone name

தமிழில் “வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் சன்னிலியோன். தற்போது, ”வீரமாதேவி” என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.Sikh Organization protest Sunny Leone name

சன்னிலியோனின் இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. அவரது வாழ்க்கையை ”கரன்ஜித் கவுர்: த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்” என்ற பெயரில் தொடராக தயாரித்து உள்ளனர். இந்த தொடர் இணையதளத்தில் வெளியாகிறது.

சன்னிலியோனின் இளவயது வாழ்க்கை போராட்டங்கள், பாலியல் தொழிலுக்கு வந்த சூழ்நிலைகள், சினிமாவில் அறிமுகமானது உள்ளிட்ட வி‌ஷயங்கள் இந்த தொடரில் இடம்பெற்று உள்ளன.

இந் நிலையில் கவுர் பெயரை சன்னிலியோன் பயன்படுத்த சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சீக்கிய பெண்கள் அமைப்பும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

சீக்கிய அமைப்பின் செய்தி தொடர்பாளர் தில்ஜித் சிங் பேடி கூறும்போது :-

”கவுர் என்பது சீக்கிய குருவால் சீக்கிய பெண்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையான பெயர். சீக்கிய போதனைகளை பின்பற்றாதவர்கள் யாரும் இந்த பெயரை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்.

மீறி பயன்படுத்தினால் சீக்கிய மத உணர்வுகளை புண்படுத்துவதாக ஆகும். எனவே சன்னிலியோன், கவுர் பெயரை பயன்படுத்தக்கூடாது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

எனினும் இந்த எதிர்ப்பை மீறி சன்னிலியோன் வாழ்க்கை தொடரை இன்று முதல் இணையத்தளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..!

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை : மனம் திறந்த விஜய் சேதுபதி..!

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..!

ஜீவாவின் திடீர் முடிவு : கலக்கத்தில் ரசிகர்கள்..!

மூன்றே நாட்களில் இத்தனை கோடியா..? : தமிழ்படம் 2 வசூல் நிலவரம்..!

முத்தத்திற்கு மறுத்தேன்.. 3 படங்களை இழந்தேன் : மடோனா செபஸ்டியன் பேட்டி..!

ஜூங்கா படத்தில் ரசிகரை அறிமுகப்படுத்திய விஜய்சேதுபதி..!

சுந்தர் பிச்சை வேடத்தில் விஜய் : சர்கார் பட லேட்டஸ்ட் அப்டேட்..!

சங்கத்து வேலைய பார்க்காமல் அங்கத்து வேலையை பார்க்கும் விஷால் : ஸ்ரீ ரெட்டி பகீர் புகார்..!

Tags :-Sikh Organization protest Sunny Leone name