புதையல் தோண்ட முற்ப்பட்ட 5 பேர் கைது

0
899
trinco Police said arrested five suspects treasure hunt Jamalai area

(trinco Police said arrested five suspects treasure hunt Jamalai area)

திருகோணமலை தலைமை பொலிஸ் காரியாலயத்திற்க்கு உட்பட்ட ஜமாலியா பிரதேசத்தில் புதையல் அகழ்விற்க்கு முற்பட்ட 5 சந்தேக நபர்களை தாம் கைதுசெய்ததாக தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

அனுராதபுரத்தைச் சேர்ந்த 3 நபர்களையும் ஜமாலியாவைச் சேர்ந்த 2 நபர்களையும் தாம் கைது செய்ததாகவும் அவர்களிடமிருந்து புதையல் இருக்கும் இடத்தை அடையாளப்படுத்தும் ஸ்கேனிங் சாதனத்தையும் தாம் கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்ததாக அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களையும் பொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி கூறினார்.

(trinco Police said arrested five suspects treasure hunt Jamalai area)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites