விஜய் கோக்கலே ஊடாக நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ள விடயம்….!

0
348
Indian foreign minister visit met president maithripala sirisena

இந்திய- இலங்கை கூட்டு நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்துமாறு, விஜய் கோக்கலே ஊடாக நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். Indian foreign minister visit met president maithripala sirisena

இலங்கைக்கான ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோக்கலே, இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்த விஜய் கோக்கலே, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறுத்தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

இதன்போது மத்தல விமான நிலைய நிர்வாக செயற்பாடு, திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம், திருகோணமலை எண்ணெய் களஞ்சிய வசதிகள் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் கோக்கலே இந்திய வெளியுறவு செயலாளராக பதவி ஏற்றதன் பின்னர் அவர் இலங்கைக்கு முதல் தடவையாக இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது தாம் சந்தித்த அதிகாரிகளிடம், இந்தியாவின் கரிசனைகளை மனதில் வைத்து செயற்பாடுமாறு தெரிவித்ததாகவும் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Indian foreign minister visit met president maithripala sirisena

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites