தொடரும் பயங்கரம் : மேலும் இருவர் நேற்றிரவு சுட்டுக்கொலை – மொனராகலையில் சம்பவம்

0
746
two killed shooting monaragala

மொனராகலை மாவட்டத்தின் இரண்டு பிரதேசங்களில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.(two killed shooting monaragala)

மொனராகலை – ஊவ – குடாஓய பிரதேசத்தில் மூன்று நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு நீண்டதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 52 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை , மொனராகலை – கொவிந்துபுர – உனானயாய பிரதேசத்தில் நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல இடங்களில் அண்மைக்காலமாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:two killed shooting monaragala,two killed shooting monaragala,two killed shooting monaragala,