பிலிப்பைன்ஸ் வழியிலேயே இலங்கையும்: பதறவைக்கும் மைத்திரி!

0
737
Maithripala Sirisena Rodrigo Duterte  Route

இலங்கையில் போதைப்பொருளை ஒழிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கையானது, தாம் எடுத்த நடவடிக்கைக்கு ஒப்பானதென பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Maithripala Sirisena Rodrigo Duterte Route

மைத்திரிபாலவின் இந்நடவடிக்கையை பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் பாராட்டியுள்ளார் என பிலிப்பீன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால பிலிப்பைன்ஸ் நாட்டின் சட்ட விரோத போதைப் பொருள் தொடர்பான வெற்றிகரமான அணுகுமுறையை ஏற்றுக்கொண்ட நிலையில், ஜனாதிபதி டியுடேர்ட்டின் பேச்சாளர் ஹெர்ரி ரொக் இதனை தெரிவித்துள்ளார்.

“நிச்சயமாக சட்ட விரோத போதை பொருள்களுக்கு எதிராக எங்களின் நடவடிக்கைகளை மற்றைய நாடுகள் கவனஞ்செலுத்தியுள்ளதோடு சிறந்த முறைகள் இவைகள்தான் என தெரிவித்துள்ளன. நாங்கள் அதனை பாராட்டுகின்றோம் என்றாலும் இதுவரை மரண தண்டனை அமுல்படுத்தப்படவில்லை. செய்திகளின்படி பிலிப்பின் நாட்டின் வெற்றியை பின்பற்ற இலங்கை போதை பொருள் விநியோகத்தர்களை தூக்கிலிட ஆரம்பிக்கவுள்ளது.

மரணதண்டனை50 வருட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மரண தண்டனை உத்தரவை கையொப்பமிட தயாரக உள்ளதாக ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார். நாங்கள் இன்னமும் அந்த நிலையை எட்டவில்லை என் நினைக்கின்றேன். நாங்கள் இன்னமும் பொலிஸ், போதை பொருள் அமுலாக்கும் நிறுவனம், தேசிய புலனாய்வு சபை ஆகியவற்றை போதை பொருள் விநியோகத்தர்களுக்கு எதிராக செயல்படுத்தி வருகின்றோம் ” என ரொக் கூறியுள்ளார்.

தேர்தல் பிரசாரத்தின் போது கூறியது போன்று டியுடேர்ட் தனது அலுவல்கள் தொடங்கிய முதல் நாளே ஜுலை 2016 இல் போதை பொருட்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் 1.2 மில்லியன் போதை பொருள் குற்றவாளிகள் சரணடைய தூண்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.