பெண்ணின் தாலி கொடியை கொள்ளையிட முயன்றவர்கள் மீது பொலிஸார் பாராமுகம்

0
523
Kilinochchi murukandi theif trying screw girls chain catch police

(Kilinochchi murukandi theif trying screw girls chain catch police)

கிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் இன்று மாலை பெண் ஒருவரின் தாலி கொடியை அறுக்க முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த போதும் பொலிஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முறிகண்டி அக்கராயன் வீதியில் தொடர்ச்சியாக பெண்களின் நகைகள் அறுத்து செல்லப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த மாதத்தில் மாத்திரம் இரு பெண்களிடம் நகைகள் அறுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்த போதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அக்கராயன் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இந்த வீதியால் பயணித்துள்ளார்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குடும்பஸ்த்தருடைய மனைவியின் தாலி கொடியை அறுக்க முயன்றுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அந்த பகுதியில் உள்ளவர்களும், குறித்த குடும்பஸ்தரும் இணைந்து திருடர்களை துரத்திய போது ஒருவர் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டதன் பின் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் மற்றைய திருடனும் மடக்கி பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவனும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த அக்கராயன் பொலிஸார் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர்.

பின்னர் பொதுமக்கள் திரண்டு பொலிஸாருடன் தர்க்கப்பட்ட நிலையில் திருடர்களை மடக்கி பிடித்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக பொலிஸார் அச்சுறுத்தியுள்ளதாக கூறும் மக்கள் பொலிஸாருடைய பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

(Kilinochchi murukandi theif trying screw girls chain catch police)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites