“தியாகம் செய்ய தயாராக இல்லை” – பஷில்

0
466
US citizenship Basil Rajapaksa

அமெரிக்க பிரஜாவுரிமையை விட்டுக்கொடுக்க தியாகம் செய்ய தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். US citizenship Basil Rajapaksa

பிரதான நாளேடொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

குடும்பத்திடம் இருந்து பிரிந்து இருப்பது தனக்கு கடினம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு தன்னைப்போன்ற சில அரசியல்வாதிகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் இந்த முடிவின் மூலம் தாம் பழிவாங்கப்படுவதாகவும், பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பஷில் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கப்போவதில்லை என தெரிவித்துள்ள பஷில் கோட்டபாய நிற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கமே இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.