பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்

0
332
Sexual abuse offenders sentenced death

மரண தண்டனை நிறைவேற்றப்படுமானால் அதனை போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மாத்திரம் கட்டுப்படுத்தாமல் பெண்களை பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கும், சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் குற்றவாளிகளுக்கும் நிறைவேற்றப்பட வேண்டும் என முன்னாள் பிரதி அமைச்சர் சுமேதா எச். ஜயசேன வலியுறுத்தியுள்ளார். (Sexual abuse offenders sentenced death)

நாட்டில் தினந்தோறும் அதிகரித்துவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலினால் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்கொடுமைகளை முழுமையாக இல்லாதொழிக்க மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் இடம்பெற்ற குற்றங்களை கணக்கில் எடுத்தால் குற்றவாளியான நபர்களுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றங்களை குறைக்க நேர்மையான முடிவுகளை எடுப்பதென்றால் அதற்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Sexual abuse offenders sentenced death