டெல்லி ஆஸ்பத்திரியில் 3 ஆண்களுக்கு வினோதமாக நடந்த சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன்

0
386
migrant kidney transplants Delhihospital Everybodys fitted another kidney

migrant kidney transplants Delhihospital Everybodys fitted another kidney

டெல்லி ஆஸ்பத்திரியில் 3 ஆண்களுக்கு சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன் நடைபெற்றது. ஒவ்வொருவரின் மனைவி சிறுநீரகமும் மற்றொருவருக்கு பொருத்தப்பட்டது.

டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில், டெல்லியைச் சேர்ந்த முகமது உமர் யூசுப் (வயது 37), அஜய் சுக்லா (40) மற்றும் பீகார் மாநிலம் மதுபானியைச் சேர்ந்த கமலேஷ் மண்டல் (54) ஆகியோர் சிறுநீரக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

ஆனால் ரத்த பரிசோதனையில் அந்த மூவருக்கும் அவர்களுடைய மனைவிமார்களின் சிறுநீரகங்கள் பொருந்தாது என தெரியவந்தது. மேலும் உறவினர்களிடம் இருந்தும் அவர்களுக்கு சிறுநீரகங்கள் தானம் பெறமுடியவில்லை.

அதேசமயம் அதிசயமாக, முகமது உமர் யூசுப்பின் மனைவி சனா காதுனின் (26) சிறுநீரகம் அஜய் சுக்லாவுக்கும், அஜய் சுக்லாவின் மனைவி மாயா சுக்லாவின் (37) சிறுநீரகம் கமலேஷ் மண்டலுக்கும், கமலேஷ் மண்டலின் மனைவி லட்சுமி சாயாவின் (40) சிறுநீரகம் முகமது உமர் யூசுப்புக்கும் பொருந்துவது தெரிய வந்தது. இதுபற்றி டாக்டர்கள் அந்த பெண்கள் மூவரிடமும் கூறிய போது, அவர்கள் தங்கள் சிறுநீரகத்தை தானம் வழங்க சம்மதம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுநீரகம் தானம் பெறும் 3 ஆண்கள், சிறுநீரகம் தானம் கொடுக்கும் 3 பெண்கள் ஆகிய 6 பேருக்கும் ஒரே நேரத்தில் ஆபரே‌ஷன் நடந்தது. சனா காதுனின் சிறுநீரகம் ஆபரே‌ஷன் மூலம் மாயா சுக்லாவின் கணவர் அஜய் சுக்லாவுக்கு பொருத்தப்பட்டது.

இதேபோல் மாயா சுக்லாவின் சிறுநீரகம் லட்சுமி சாயாவின் கணவல் கமலேஷ் மண்டலுக்கும், லட்சுமி சாயாவின் சிறுநீரகம் சனா காதுனின் கணவர் முகமது உமர் யூசுப்புக்கும் பொருத்தப்பட்டது. 14 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆபரே‌ஷன் வெற்றிகரமாக அமைந்தது.

3 பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்கு சிறுநீரகம் தானம் கொடுக்க முடியாத நிலையில், ஒருவர் மற்றொருவரின் கணவருக்கு தங்கள் சிறுநீரகத்தை தானமாக கொடுத்து ஒருவருக்கு ஒருவர் பலன் பெற்று உள்ளனர்.

ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத இன்று 3 தம்பதியினரும் சிறுநீரக தானத்தின் மூலம் நண்பர்களாகி விட்டனர். இந்த மூன்று சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன்களும் அபூர்வ நிகழ்வு என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

migrant kidney transplants Delhihospital Everybodys fitted another kidney

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை:

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :