மத்தலவில் இருந்த பாதுகாப்பு ஸ்கேனர் கருவி கட்டுநாயக்கவுக்கு மாற்றம் : மத்தலவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்

0
448
mattala airport

மத்தல விமானநிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்காவது பாதுகாப்பு ஸ்கேனர் கருவி அகற்றப்பட்டுள்ளதால் விமானநிலையத்தின் பாதுகாப்பு மேலும் கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(mattala airport)

பயணிகள் வருகைதரும் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஸ்கேனர் கருவி அகற்றப்பட்டு அது பண்டாரநாயக்க விமானநிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தல விமான நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் ஆறு ஸ்கேனர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், அவற்றில் மூன்று ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளதாகவும், நான்காவதாக மற்றுமொரு கருவி அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பாதுகாப்பு ஸ்கேனர் கருவிகள் இவ்வாறு அகற்றப்படுகின்றமை விமான நிலையத்தின் பாதுகாப்புக் குறித்த அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாக விமானநிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:mattala airport,mattala airport,mattala airport,