யாழில் இன்று அதிகாலை அரங்கேறிய வாள்வெட்டு : பொலிஸ், அமைச்சு குழு இன்னும் யாழில்..!

0
1568
jaffna kodikamam sword attack

யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தங்கியுள்ள போதும் யாழ்.கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.(jaffna kodikamam sword attack)

யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் நேற்று சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்ந்தனர்.

அவர்கள் இன்றும் யாழ்.மாவட்டத்திலேயே தங்கியிருக்கும் நிலையில் யாழ்.கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கொடிகாமம்- கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்கையில் உள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த குழு ஒன்று வீட்டை அடித்து சேதப்படுத்தியதுடன் வீட்டுக்குள் புகுந்து 5 பிள்ளைகளின் தந்தையான சிவராசா சசிக்குமார் (வயது 44) என்பவர் மீது சரமாரியாக வாளால் வெட்டிவிட்டுத் தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் படுகா யமடைந்த சசிக்குமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு உடனடியாகவே முறைப்பாடு கொடுக்கப்பட்டபோதும் இன்று காலை 9 மணிவரை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகின்றது.

குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கூறி 24மணி நேரத் திற்குள் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:jaffna kodikamam sword attack,jaffna kodikamam sword attack,jaffna kodikamam sword attack,