3டி யில் தயாராகும் படுபயங்கரமான அஞ்சலியின் ‘லிசா’ திகில் படம்..!

0
340
Anjali Lisaa 3D Tamil Movie

நடிகை அஞ்சலி, ”லிசா” என்ற படுபயங்கரமான ஒரு திகில் படத்தில் நடிக்கிறார்.(Anjali Lisaa 3D Tamil Movie)

அதாவது, கிராமத்தில் வசிக்கும் தாத்தா-பாட்டியை பார்க்க செல்லும் கதாநாயகிக்கு ஏற்படும் அனுபவங்களே படத்தின் கதை.

“ராஜா மந்திரி”, “பீச்சாங்கை”, “மதுரை வீரன்” ஆகிய படங்களை தயாரித்த ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரிக்கிறார். இவரிடம் உதவியாளராக இருந்த ராஜு விஸ்வநாத் டைரக்டு செய்கிறார்.

படத்தை பற்றி அவர் தெரிவிக்கையில்.. :-

”இந்தியாவில், `ஸ்டீரியோஸ்கோப் 3டி’ என்ற தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் படம், இது. இதன் அனுபவம் மிரட்டும் வகையில் இருக்கும். 3டி படங்கள் என்றாலே ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும். அதிலும் இது 3டியில் தயாராகும் திகில் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறும். அதை ஈடுகட்டும் வகையில், `லிசா’ ஒரு பெரிய திகில் விருந்தாக இருக்கும்.

சாம் ஜோன்ஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபல இயக்குனர் நடிகர் மக்ரான்ட் தேஷ்பாண்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்த சலீமா, சுமார் 20 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார்.

அத்துடன், யோகி பாபு, மைம்கோபி ஆகியோரும் நடிக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி, இசையமைக்கிறார். படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.” என தெரிவித்துள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Anjali Lisaa 3D Tamil Movie