நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வலை வீசிய புரோக்கர்களை சிக்க வைத்த சீரியல் நடிகை..!

0
378
Serial Actress Jayalakshmi complained illegal activity

சீரியல் நடிகை ஜெயலட்சுமி, வாட்ஸ் ஆப் மூலம் நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வலை வீசிய இரண்டு புரோக்கர்களை சாதுரியமாக போலீஸாரிடம் மாட்டிவிட்டுள்ளார்.(Serial Actress Jayalakshmi complained illegal activity)

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.. :-

அண்மைக் காலமாகவே சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் பல நடிகைகள் சினிமா துறையில் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளி உலகத்திற்கு சொல்லி வருகின்றனர்.

சமீபத்தில் கூட தெலுங்கு நடிகைகளை மூளைச்சலவை செய்து, புரோக்கர் ஒருவன் அமெரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக கைது செய்யப்பட்டான்.

இந்நிலையில், சென்னையில் புரோக்கர் கும்பல் ஒன்று நடிகைகளுக்கு, வாட்ஸ் ஆப் மூலம் கொச்சையான மெசேஜ்களை அனுப்பி வந்தன. அதில் தாங்கள் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அரசியல் பிரமுகர்கள், விஐபி, விவிஐபியுடன் நீங்கள் ரிலேஷன்ஷிப் வைத்துக் கொண்டால் சுலபமாக 30000 ரூபாயிலிருந்து 3 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என பல நடிகைகளுக்கு வலை வீசியுள்ளன.

இந்த மெசேஜை அந்த புரோக்கர் கும்பல் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமிக்கு அனுப்பியுள்ளது. ஜெயலட்சுமி இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அந்த அயோக்கியன்களை ஜெயலட்சுமியின் மூலமே பிடிக்க ஸ்கெட்ச் போட்ட போலீஸார், ஜெயலட்சுமியின் வாட்ஸ் ஆப் எண் மூலம் அவர்களை அண்ணா நகரில் உள்ள காபி ஷாப்பிற்கு வரவழைத்தனர். அங்கு மறைந்திருந்த போலீஸார், இரண்டு புரோக்கர்களை அதிரடியாக கைது செய்தனர்.

அத்துடன், இதுவரை எந்தெந்த நடிகைகளை இவர்கள் பாலியல் தொழிலிற்கு தள்ளியிருக்கிறார்கள் என்றும் இதில் யாரேனும் பெரிய நபர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த கார்த்தி – சூரி : செம கலாட்டா..! (படங்கள் இணைப்பு)

தமிழ்ப்படம் 2 : திரை விமர்சனம்..!

ஹாலிவுட் திரைப்படமாகும் தாய்லாந்து குகைச் சம்பவம் : மனதை உறைய வைத்த சம்பவம்..!

பளீச்சென்ற முதுகைக் காட்டி அனைவரையும் பதற வைத்த நடிகை கஸ்தூரி..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Serial Actress Jayalakshmi complained illegal activity