கினிகத்தேனையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

0
508
siege illegal liquor station Ginigathena

கினிகத்தேனை பொல்பிட்டிய மாதென்ன பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. (siege illegal liquor station Ginigathena)

அத்துடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் கசிப்புகளும் அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்திய உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சுற்றிவளைப்பின் போது கசிப்பு இஸ்பிரிட் 16000 மில்லி லீற்றர், அதனை உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்திய கசிப்புவகை 185000 மில்லி லீற்றரும் கைப்பற்றப்படுள்ளதாக ஹட்டன் மதுவரித் திணைக்கள அத்தியட்சர் டி.எம். திலகரத்ன தெரிவித்தார்.

புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையில் பொல்பிட்டிய மாதென்ன பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் இவ்வாறு இயங்கிவந்துள்ளது.

இதனையடுத்து மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து ஹட்டன் மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் டி.எம். திலகரத்ண குழுவினர் இந்த இடத்தை சுற்றிவளைத்து கசிப்பையும் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், எதிர்வரும் 18 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டவிரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் இடங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திருந்தால் உடனடியாக தகவல்களை ஹட்டன் மது வரி திணைக்களத்திற்கு அறியத்தருமாறு ஹட்டன் மது வரித் திணைக்கள அத்தியட்சர் டி.எம். திலகரத்ன கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; siege illegal liquor station Ginigathena