யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு

0
865
Secret police meeting Jaffna

யாழ்ப்பாண குடாநாட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்ட சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர், பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இரகசிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். (Secret police meeting Jaffna)

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் இன்று காலை யாழ்ப்பானத்திற்கு விஐயம் செய்திருந்தனர்.

இந்த விஜயத்தின் போது, யாழ். பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

ஆயினும் முக்கியமான இந்தக் கலந்துரையாடல் நடைபெறும் மண்டபத்திற்கு ஊடகவியியலாளர்கள் அனுமதிக்கப்படாது அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Secret police meeting Jaffna