தனது சகோதரியினதும் சகோதரனினதும் மகள்கள் இருவரை பாலியல் கொடுமை புரிந்த நபரை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க எல்பிடிய நீதவான் உத்தரவிட்டுள்ளார். Abuse Elpitiya
இந்த சிறுமிகள் இருவரும் 13 வயதுடையவர்கள் எனவும் பிடிகல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்றவர்கள் எனவும் பிடிகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடி வயிற்று கோளாறு காரணமாக சந்தேக நபரின் மூத்த சகோதரியின் மகளை ஒரு கிழமைக்கு முன்பு அரச வைத்தியசாலையில் அனுமதித்த போது அங்கு இந்தச் சிறுமியை ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளபோது இந்தச் சிறுமி 2 1/2 மாத கர்ப்பிணி என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
பின்பு இந்தச் சிறுமியின் தாயார் பிடிகலை பொலிஸில் புகார் செய்துள்ளார். சந்தேக நபரின் இளைய சகோதரன் தனது மனைவியை விட்டு விலகி தனியே வசிப்பதாகவும் சந்தேக நபர் தனது சகோதரனால் கைவிடப்பட்ட அவரின் மனைவியுடனும் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
மேலும் இவரின் இளைய சகோதரனுடைய மகளான சிறுமியையும் பாலியல் கொடுமை புரிந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் வெளிவந்துள்ளது. மேலும் சந்தேக நபரின் சகோதரியின் இல்லம் இவரின் இல்லமும் அருகில் உள்ளதாகவும் சந்தேக நபரின் சகோதரனின் மனைவியும் அவளின் மகளும் ஒன்றாக வழித்துள்ளனர். இரு சிறுமிகளையும்சந்தேக நபர் கொலை செய்வதாக பயமுறுத்தி சில காலமாக பாலியல் கொடுமை புரிந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சிறுமிகளின் வைத்திய அறிக்கை சம்ர்பிக்குமாறும் மேலும் இவர்களை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்கவும் சந்தேக நபரை சமூக நோய்கள் தொடர்பாக வைத்திய அறிக்கை சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.