இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
736
Today Horoscope 12-07-2018

இன்று!
விளம்பி வருடம், ஆனி மாதம் 28ம் தேதி, ஷவ்வால் 27ம் தேதி,
12.7.18 வியாழக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி காலை 11:40 வரை;
அதன் பின் அமாவாசை திதி, திருவாதிரை நட்சத்திரம் இரவு 10:39 வரை;
அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம், மரண, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது : சர்வ அமாவாசை, நதி கடல் நீராடல் சிறப்பு

.

மேஷம்:

உறவினர் உங்களிடம் எதிர்பார்ப்புடன் நடந்து கொள்வர். தொழில் வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை நிலவும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

 

ரிஷபம்:

சிலரது விமர்சனத்தால் மனம் தளர்வீர்கள். இடம், சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமத்திற்கு ஆளாவர். பெண்கள் திடீர் வெளியூர் பயணம் மேற்கொள்வர்.

மிதுனம்:

கடந்த காலத்தில் செய்த உதவிக்கான நன்மை தேடி வரும். தன்னம்பிக்கையுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருமானம் திருப்தியளிக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கடகம்:

செயல் நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம். நல்லோரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாரான அளவில் இருக்கும். குடும்பத்திற்கான பணத்தேவை அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.

சிம்மம்:

மனதில் ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். பகைவரால் உருவான கெடுசெயல் பலமிழக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். லாபம் திருப்திகரமாக அமையும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி:

குடும்பச் சூழல் அறிந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவுக்காக கடன் வாங்க நேரிடும். பிராணிகளிடம் இருந்து விலகுவது நல்லது.

துலாம்:

நண்பருக்கு இயன்ற அளவில் உதவிபுரிவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் அனுகூலம் உருவாகும். வருமானம் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

விருச்சிகம்:

எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சுமாராக இருக்கும். திடீர் செலவால் சேமிப்பு பணம் கரையும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும்.

தனுசு:

மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது

மகரம்:

தேவையற்ற விவாததங்களில் ஈடுபட வேண்டாம். தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை பயன்படுத்துவது நல்லது. லாபம் சராசரி அளவில் இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் வேண்டும்.

கும்பம்:

உங்கள் பேச்சில் அன்பும், பண்பும் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும். ஆதாயம் உயரும். பெண்கள் புத்தாடை, ஆபரணம் வாங்க யோகம் உண்டு. விலகிய சொந்தம் விரும்பி வந்து பாராட்டுவர்.

மீனம்:

மனதில் இருந்த தயக்கநிலை மாறும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி மேற்கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவர். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்