தனிக்கட்சி அமைக்கும் எண்ணமில்லை! கையை விரித்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!

0
476
North Chief Minister Vigneswaran No Idea New Political Party

சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக் கினன் , வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, கைதடியில் உள்ள முதலமைச்சரின் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். North Chief Minister Vigneswaran No Idea New Political Party

இந்த சந்திப்பின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் தனது அரசியல் எதிர்காலம் தொடர்பில் கருத்து கூறினார். அவர் கூறியுள்ளதாவது,

“எனது அரசியல் எதிர்காலத்தைப் பற்றியும், புதிய கட்சி உருவாக்கப் போகின்றீர்கள் என்று நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன எனவும் கனேடியத் தூதுவர் என்னிடம் வினவினார்.

அதற்கு நான், இதுபற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, எனது கட்சி என்னை வேட்பாளராக நிற்க வாய்ப்பளிக்காவிடின், வீட்டிற்குச் செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணையலாம், இல்லாவிடின், புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்கலாம் என்று தான் கூறியிருந்தேன்.

ஆனால், ஊடகங்கள் நான் கூறிய முதல் இரு விடயங்களையும் விட்டுவிட்டு, மூன்றாவதாக கூறிய விடயத்தை மட்டும் பெரிதாக வெளியிட்டு விட்டன.

தனிக்கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் நான் எடுக்கவில்லை என்று அவருக்கு தெரிவித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites