வவுனியா பிரதேசத்தில் வைத்தியர் என கூறி கைவரிசையை காட்டிய திருடன்!

0
455

வவுனியா மாவட்டத்தின் பல பிரதேச வைத்தியசாலைகளில் வைத்தியர் என்ற அடையாளத்துடன் நபர் ஒருவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட விடயம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. Vavuniya District Thief Cheat People Says He is Doctor

கடந்த வாரம் புளியங்குளம், பூவரசங்குளம், பாவற்குளம், சூடுவெந்தபுலவு பிராந்திய வைத்தியசாலைகளுக்கு வந்து தன்னை வைத்தியர் என அறிமுகம் செய்து ஊழியர்களை ஏமாற்றி தனது களவு வேலைகளை நடாத்தி முடித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை ஓமந்தை வைத்தியசாலைக்கு முன்புள்ள கடையொன்றில் சிறிதளவு பணத்தினை கடனாகக் கேட்டுப் பெற்றுச்சென்று விட்டார்.

அது போலவே நேற்று செவ்வாய்க்கிழமை, வவுனியா வடக்கு சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமனை ஊழியரிடம் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

ஓமந்தை உட்பட்ட பல பாடசாலைகளிலும் கைவரிசையை காட்டியுள்ளார். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் சென்றுள்ளார்.

கழுத்தில் Stethoscope உடன் நடமாடும் இவர் பற்றி பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை