எங்கள் ஆட்சி நிலைநாட்டப்படும் போது முஸ்லிம்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – மஹிந்த

0
548
rule setup Muslims problems end Mahinda Rajapaksa promised

(rule setup Muslims problems end Mahinda Rajapaksa promised)

எங்களின் ஆட்சி அமைக்கப்படும் போது, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சினைகளுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைப்போம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் பிரச்சினைகள் நெருக்கடிகள் என்பன வெளிச்சக்திகளின் மூலம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வரும் விடயமாகும். அது முழு இலங்கைக்கும் உரித்தான பிரச்சினையாகும்.

அதற்குப் பின்னால் ஒரு சில குறிப்பிட்ட முகவர்கள் செயற்படுகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது அதற்கு ஒரு முற்றுப் புள்ளியை வைப்போம் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பதற்காக கண்டியிலிருந்து சென்ற சமூக ஆர்வலர்கள் சிலருடன் இன்று (11) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அந்தச் சந்திப்பின்போது தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், அந்நிய நாட்டு சூழ்ச்சிகள் என்பது இலங்கைக்கு புதியதல்ல, மக்கள் விடுதலை முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின.

பயங்கரவாத சூழ்நிலை காரணமாக அதிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகினர். வெளிநாட்டுச் சக்திகளுடைய சூழ்ச்சிகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன.

இன்று முஸ்லிம்களுடைய வியாபார நிலையங்களையும் பொருளாதாரத்தையும் முடக்குவதற்கு சதி செய்து வருகின்றனர்.

இது எமது நாட்டுக்குரிய பிரச்சினை. நாங்கள் ஆட்சிக்கு வரும் போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று அவர் உறுதியளித்தார்.

குறித்த சந்திப்பில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷவாஹீர் சாலி, நசார் ஹாஜியார். அக்குறணை கலீல். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகாரத்திற்கான இணைப்பதிகாரி சிராஷ் யூனுஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

(rule setup Muslims problems end Mahinda Rajapaksa promised)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites