ரஜினியின் 2.0 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

0
474
Rajinis 20 film release date announced

ஷங்கரின் பிரம்மாண்ட தயாரிப்பில், ரஜினியின் நடிப்பில் உருவான ”2.0” படம் உலகம் முழுவதும் வரும் நவம்பர் 29 ஆம் திகதி வெளியிடப்படும் என படத்தின் இயக்குநர் ஷங்கர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.(Rajinis 20 film release date announced)

அதாவது ”சிவாஜி”, ”எந்திரன்” படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்குநர் ஷங்கர் மீண்டும் இயக்கும் படம் ”2.0”. இப்படத்தில் ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இப்படத்தை, நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ரோபா பின்னணியில் மிகுந்த பொருட்செலவில் லைகா நிறுவனம் இப்படத்தை எடுத்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் படம், டாக்கிங் போர்ஷன் முடிந்து, பல ஆண்டுகளாக கிராபிக்ஸ் பணிகள் வெளிநாடுகளில் நடந்து வந்தது.

படத்தின் பாடல், டீசர் வெளியாகி ரசிகளின் ஆதரவை பெற்றது. அதனால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது. ஆனால் படம் வெளியீடு தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

இந்நிலையில் தற்போது, ”2.0” படம் வரும் நவம்பர் 29 ஆம் திகதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிடப்படுவதாக படத்தின் இயக்குநர் ஷங்கர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!

ஓவியாவுடன் காதல் : மனம் திறந்த ஆரவ்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!

மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!

எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Rajinis 20 film release date announced