விரைவில் கொழும்பு – தூத்துக்குடி இடையில் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

0
484

கொழும்­புக்கும் தூத்­துக்­கு­டிக்கும் இடை­யி­லான பய­ணிகள் கப்பல் சேவை­யினை மீண்டும் ஆரம்­பிப்­பது தொடர்­பான அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை கப்­பல்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்­துள்ளார்.இதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. Colombo – Thoothukudi Ship Service Commence Again Soon

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று அமைச்­ச­ரவைகூட்டம் இடம்­பெற்­றது. இதன்போதே இந்த அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை அமைச்சர் சமர்ப்பித்தார்.

இதன்­போது இங்கு கருத்து தெரி­வித்த அமைச்சர் மனோ கணேசன் நவம்பர் மாதத்­துக்கு முன்னர் இந்தக் கப்பல் சேவை­யினை ஆரம்­பிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதன்­மூலம் இந்­தியா செல்லும் ஐயப்ப பக்­தர்­க­ளுக்கு பெரும் நன்மை ஏற்­படும். எனவே அர­சாங்கம் உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை