பாவனா போன்று நானும் கடத்தப்பட்டேன் : நடிகை பார்வதி பரபரப்புத் தகவல்..!

0
503
Actress Parvathy kidnaped shocking news

கடந்த ஆண்டு நடிகை பாவனாவை கடத்திய சம்பவம் தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார்.(Actress Parvathy kidnaped shocking news)

அதைத் தொடர்ந்து அவரை மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் உறுப்பினராக சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் பாவனா, கீதுமோகன்தாஸ், ரம்யா நம்பீஸன், ரிமா கல்லிங்கல் ராஜினாமா செய்தனர்.

மேலும், நடிகை கடத்தல் விவகாரம் தொடர்பான வழக்கு முடிவுக்கு வராத நிலையில் நடிகை பார்வதி தன்னையும் கடத்தினார்கள் என்று கூறி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது.. :-

“எனது தோழி நடிகை கடத்தப்படட தகவல் அறிந்து நான் அதிர்ச்சியானேன். ஆனால் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. இது எனக்கு மேலும் அதிர்ச்சியை தந்தது.

ஏனென்றால் எனக்கும் அதுபோல் ஒரு சம்பவம் நடந்தது. என்னை கடத்தியது யார் என்பதை இப்போதுகூட தெரிவித்து தண்டனை வாங்கித் தர முடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை.

அவர்கள் எதையும் செய்யத் துணிந்தவர்கள். எனக்கு நடந்த சம்பவத்துக்காக நான் அழுதுகொண்டு மூலையில் உட்கார்ந்து விடவில்லை. அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பெண்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை சொல்கிறேன்” என நடிகை பார்வதி கூறியுள்ளார்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!

சாமி ஸ்கொயர் படத்தின் அதிரூபனே.. அதிகாரனே.. சிங்கிள் டிராக் ரிலீஸ்..!

குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!

காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!

ரஜினியின் 2.0 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!

விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

Tags :-Actress Parvathy kidnaped shocking news