மகிந்தவை விட சமல்தான் அதற்கு சரியானவர் – மஹிந்த வீட்டில் வாசுவின் ஆய்வு

0
400
Vasudeva said chamal Rajapakse most eligible presidential candidate

(Vasudeva said chamal Rajapakse most eligible presidential candidate)

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு சமல் ராஜபக்ஷதான் கூட்டு எதிர்க்கட்சியில் மிகவும் தகுதியானவர் என்று அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எல்லா சமூகத்தினரிடமும் வரவேற்பைப் பெற்ற, ஊழல் குற்றச்சாட்டுக்கள் அற்ற ஒருவர் சமல் ராஜபக்ஷதான் என்பதை நாம் அறிவோம்.

அதேவேளை, சமல் ராஜபக்ஸதான் தகுதியானவர் என டிலான் பெரேரா, குமார வெல்கம உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (10) மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற போது செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கூட்டு எதிரணியிலுள்ள சகல கட்சிகளும் கூட்டு பொதுஜன முன்னணி எனும் பெயரில் மலர் மொட்டு சின்னத்தில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

(Vasudeva said chamal Rajapakse most eligible presidential candidate)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை