இராணுவமுகாமை அகற்றி பூங்கா அமைக்க நல்லூர் பிரதே சபையில் பிரேரணை!

0
532
Nalloor Local Authority Motion Remove Army Camp

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் முகாமிட்டுள்ள இராணுவத்தினரை அகற்றி அந்த இடத்தில் சிறுவர் பூங்காவை அமைப்பதற்கு நல்லூர் பிரதே சபையில் இன்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. Nalloor Local Authority Motion Remove Army Camp

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கல்வியங்காடு பால் பண்ணை அமைக்கப்பட்டிருந்த காணியில் தற்போது இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர்.

அங்கிருந்து இiராணுவத்தினரை அகற்றி சிறுவர் பூங்காவை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணை நல்லூர் பிரதே சபைத் தவிசாளரால் சபையில் முன் வைக்கப்பட்டது. அதனை சபை உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites