மத்தல விமான நிலையம் தொடர்பில் இந்தியா மௌனம்! திரைமறைவில் சதி?

0
399

மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை, இந்தியாவும், 30 வீத பங்குகளை சிறிலங்காவும் பகிர்ந்து கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது. Mattala Airport Dealing India Keep Secret No Information Revealed

40 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் இந்த உரிமை உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

70 வீத பங்குகளுக்காக 225 மில்லியன் டொலர் நிதியை இந்தியா வழங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

கடந்த வாரம் இந்திய அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்து இரண்டு நாட்கள் பேச்சுக்களை நடத்தியிருந்தது. எனினும் இந்த இணக்கப்பாடு தொடர்பாக இந்தியா தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதுபற்றி எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்று இந்திய விமான நிலையங்கள் அதிகார சபையின் பேச்சாளர் ஜேபி சிங், ஹிந்துஸ்தான் ரைம்சிடம் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் திரைமறைவில் இரகசிய பணப்பரிமாற்றங்கள் நிகழ்கின்றதா என பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites