மகிந்த மட்டுமல்ல மைத்திரியும் சீனாவிடம் விலை போனார்! அதிர்ச்சி தரும் விசாரணை!

0
160
Mahinda Maithri Receive China Money Donation Election Period

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின் போது, சீன மேர்ச்சன்ட் பொறியியல் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, 2016ஆம் ஆண்டு சிறிலங்கா காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது. Mahinda Maithri Receive China Money Donation Election Period

முதலில் மகிந்த ராஜபக்சவே நிதி பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் மைத்திரியும் சீனாவிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டார் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் தேர்தல் பரப்புரைக்காக இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் இருந்து, நிதியைப் பெற்றுக் கொண்டனர் என்று சிறிலங்கா காவல்துறையின் விசாரணைகளின் போது தெரியவந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

விசாரணைகளில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் சீன நிறுவனத்திடம் நிதியைப் பெற்றனர் என்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன.

இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவும் கூட விசாரணை நடத்தியது என்று அறியப்படுகிறது.

சீன நிறுவனத்திடம் இருந்து மகிந்த ராஜபக்ச தேர்தல் பரப்புரைக்காக 7.6 மில்லியன் டொலர் நிதியைப் பெற்றார் என்று நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டதை அடுத்து, இந்த விவகாாரம் சூடு பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites