பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பின் தொடர்ந்து சென்றால் அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். JVP MP Sunil Handunnetti Plan Arrest Arjuna Mahendran
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“அர்ஜுன மஹேந்திரனை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர பிரதமர் சிங்கப்பூர் போகவில்லை. எனினும் அர்ஜுன மஹேந்திரன் எங்கு ஒளிந்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் பிரதமர் பின்னால் ஒருவர் பின்தொடர்ந்தால் அவரை பிடிக்க முடியும். ஊடகங்களும் அதனை செய்ய முடியும். அப்போது அவரை கண்டறிய முடியும். சிலவேளைகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உதயங்க வீரதுங்கவை வரவழைப்பதாக கூறியதை போன்று பிரதமர் அர்ஜுன மஹேந்திரனை வரவழைக்க சென்றாரோ தெரியவில்லை. நீ உதயங்கவை வரவழைத்தால் என்னால் அர்ஜுனவையும் வரவழைக்க முடியும் என்ற நேரடி சவால் ஏதும் உள்ளதா என்பதும் தெரியவில்லை.
தேசிய கணக்காய்வு சட்டத்தை பலவீனப்படுத்திய பிரதான பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். ஊழல் வாதிகளை காப்பாற்ற, ஊழலை மறைக்க பிரதம அமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் இணைந்து சூழ்ச்சி செய்துவிட்டனர். அமைச்சர்களின் தேவைக்காக அரச அதிகாரிகள் செய்யும் தவறுகளை இன்று அமைச்சர்கள் காப்பாற்றுகின்றனர். ” என கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்