நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுக்கொலை : புறக்கோட்டையில் பதற்றம்

0
662
Navodya People Front Krishna died shooting

நவோதய மக்கள் முன்னணி தலைவரும்,கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான எஸ்.கே. கிருஷ்ணா, இன்று காலை இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கொழும்பு புறக்கோட்டை – ஹெட்டிவீதியில் இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்தப் பகுதியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த எஸ்.கே. கிருஷ்ணா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் உள்ள தமிழ் மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்த எஸ்.கே. கிருஷ்ணா, அண்மையில், அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளின் முழு கல்வி செலவுகளை ஏற்றுக்கொண்டிருந்மையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நவோதயா மக்கள் முன்னணியின் அரசியற் குழு தலைவரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான வேலனை வேணியன் சுகயீனம் காரணமாக தனது 80ஆவது வயதில் நேற்று காலமானமை சுட்டிக்காட்டத்தக்கது.

சிரேஷ்ட அரசியல்வாதியான வேலனை வேணியனின் உயிரிழப்பு நவோதய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று காலை அந்த முன்னணியின் தலைவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Navodya People Front Krishna died shooting,Navodya People Front Krishna died shooting,Navodya People Front Krishna died shooting