(tamilnews russia meet croatia quarter finals fifa world cup)
பீஃப்பா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதியில் ரஷ்யாவும், குரேஷியாவும் போட்டியிட்டன.
ஆரம்பத்தில் சற்று மந்தமாக இருந்த போட்டி, 31 வது நிமிடத்தில் ரஷ்யாவின் செர்ரிஷேப் சிறப்பான கோல் அடித்தார்.
அதையடுத்து ரஷ்யா 1-0 என முன்னிலை பெற்றது. 39 வது நிமிடத்தில் குரேஷியாவின் கிராமாரிக் கோலடித்து 1-1 என சமநிலையை உருவாக்கினார்.
ஆட்டம் 1-1 சமநிலையில் முடிந்ததால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
100 வது நிமிடத்தில் விடா கோலடிக்க குரேஷியா 2-1 என முன்னிலை பெற்றது. 115 நிமிடத்தில் மரியோ பெர்னான்டஸ் கோலடித்ததில் 2-2 என மீண்டும் சமநிலை உருவானது.
ஆட்டம் 2-2 என முடிந்ததால், பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 14 ம் திகதி ஆரம்பித்து, 28 ம் திகதிவரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து ஜூன் 30 முதல் ஜூலை 3 ம் திகதி வரை நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்தன.
இந்த உலகக் கோப்பையில் 7 முன்னாள் சாம்பியன்கள் என மொத்தம் 32 நாடுகள் களமிறங்கின. தற்போது காலிறுதி சுற்றை 8 அணிகள் எட்டியுள்ளன.
உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை காலிறுதியில் விளையாடுகின்றன.
ரஷ்யா கடந்த வந்த பாதை
இந்த உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த ரஷ்யா லீக் சுற்றில் 3ல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்தது.
முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 5-0 என வென்று அசத்தியது. அடுத்தது சலாவின் எகிப்தை 3-1 என்று வென்றது.
உருகுவேயிடம் 3-0 என தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயினை 4-3 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது.
தனிநாடானப் பிறகு நான்காவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் ரஷ்யா, முதல் முறையாக காலிறுதியில் விளையாடுகிறது.
குரேஷியா கடந்து வந்த பாதை
இந்த உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பெற்றிருந்த குரேஷியா மூன்று ஆட்டங்களிலும் வென்றது.
நைஜீரியாவை 2-0, அர்ஜென்டினாவை 3-0, ஐஸ்லாந்தை 2-1 என வென்றது.
நாக் அவுட்டில் டென்மார்க்கை 3-2 என பெனால்டி ஷூட்அவுட்டில் வென்றது. நான்காவது முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் குரேஷியா, 2 வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளது.
மிரட்டும் குரேஷியா இந்த உலகக் கோப்பையில் இதுவரை தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற அணியாக குரேஷியா உள்ளது.
1998 ல் அறிமுக அணியாக களமிறங்கி அரை இறுதி வரை நுழைந்து, 3வது இடத்தைப் பிடித்தது. லூகா மோட்ரிக், இவான் ராகிடிக் போன்றோர் அசத்தலாக விளையாட, 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரு மடங்கு பலத்துடன் குரேஷியா தற்போது உள்ளது.
தகவல் மூலம் – தமிழ்மைகேல்
(tamilnews russia meet croatia quarter finals fifa world cup)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்